உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்
Prabha Praneetha
2 years ago
நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், தக்காளி, கறி மிளகாய், போஞ்சி, லீக்ஸ், கரட் உள்ளிட்ட மரக்கறி வகைகள், பழங்கள் மற்றும் தேங்காய் என்பனவற்றின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளன.
உள்நாட்டு உருளைக் கிழங்கின் விலை கிலோ கிராமிற்கு 420 முதல் 500 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 320 முதல் 400 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் தக்காளியின் விலை 430 முதல் 500 ரூபா வரையில் உயர்வடைந்துள்ளது.
பாகற்காய், கரட், போஞ்சி, லீக்ஸ் போன்றவற்றின் சந்தை விலை ,பழங்களின் விலைகளும் பொதுவாக உயர்வடைந்துள்ளன.