ஓமான் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!

Mayoorikka
1 year ago
ஓமான் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!

இலங்கையில் இருந்து சுற்றுலா வீசாவில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும், ஓமானுக்கும் சென்று தொழிலை தேடுதல் செயற்பாடுகளில் நிர்க்கதியாகியுள்ள பெண்கள் தொடர்பில், இலங்கையின் நாடாளுமன்றில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இன்று   அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் பணியகத்தின் அனுமதியில்லாமல் சென்றவர்களில், ஓமானில் 77 பெண்களும் துபாயில் 77 பெண்களும் பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக ஒருவருக்கு சுமார் 10 லட்சம் ரூபா வரையில் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செலவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொறுப்பேற்கவுள்ளது. 

இதற்கான அனுமதி அமைச்சரவையின் ஊடாக பெறப்பட்டுள்ளது.  

அத்துடன் அவர்களை அழைத்து வருவதற்கு முன்னர், குற்றப்புலனாய்வுத்துறையினரை அங்கு அனுப்பி அவர்களில் விசாரணைகளை முன்னெடுத்து, குற்றம் புரிந்தோரை கண்டுபிடிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தநிலையில் சுற்றுலா வீசாவில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்று அங்கிருந்து எல்லையின் ஊடாக ஓமானுக்கு பெண்களை  அழைத்துச்சென்ற குற்றச்சாட்டின்பேரில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து 190 பெண்களை அனுப்பவிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டபோதும், சட்டத்தரணிகளின் முயற்சிகளின் அடிப்படையில் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பெண்களை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து ஓமானுக்கு சட்டரீதியற்ற வகையில், அனுப்பும் செயற்பாடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, அபுதாபியின் இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் குஷான் என்ற அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு,விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!