இங்கிலாந்தில் சிறையில் இருந்துகொண்டு மீண்டும் குற்றம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா ?

Nila
3 years ago
இங்கிலாந்தில்  சிறையில் இருந்துகொண்டு மீண்டும் குற்றம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா ?

இலங்கிலாந்தில் பயங்கரவாதக் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு நீண்ட தண்டனை கிடைக்கும் என்று நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

தற்போது, சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக, கைதிகள் வழக்கமாக அதிகபட்சமாக 42 நாட்கள் சிறைத்தண்டனையைப் பெறுவார்கள்.

ஆனால், சிறையில் பயங்கரவாதிகள் செய்யும் குற்றங்கள், சிறியதாக இருந்தாலும் இப்போது குறிப்பிடத்தக்க வகையில் அதிக சிறைத் தண்டனைக்கு அது வழிவகுக்கும் என்று நீதித்துறை செயலாளர் தெரிவித்தார்.

செல்களை நாசப்படுத்துவது போன்ற குற்றங்கள் நடந்தால் ஒரு வாரத்திற்குள் அவர்கள் விசாரணைக்கு அனுப்பப்படுவார்கள்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சிறைகளில் பயங்கரவாதச் செயல்பாடுகள் குறித்து அரசாங்கத்தின் பயங்கரவாதச் சட்டத்தின் சுயாதீன மதிப்பாய்வாளர் ஜொனாதன் ஹால் கேசி ஆய்வு செய்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4