பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி ஒழிவது தங்களின் கொள்கை கிடையாது - மஹிந்த ராஜபக்ஷ

Kanimoli
3 years ago
பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி ஒழிவது தங்களின் கொள்கை கிடையாது - மஹிந்த ராஜபக்ஷ

பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி ஒழிவது தங்களின் கொள்கை கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (22-11-2022) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிதியமைச்சர் என்ற வகையில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த பல யோசனைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) முன்வைத்துள்ளார் என கூறினார்.

சர்வதேச ரீதியாக எழுந்துள்ள சவால்களை வெற்றிக் கொள்ள நாம் இடைக்கால மற்றும் நீண்ட கால பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க வேண்டும்.

குற்றங்களை மட்டும் சுமத்திக் கொண்டிருக்காமல் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுக்க வேண்டும் என்றும் அதுவே தமது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் எவ்வாறான சிக்கல்களை எதிர்க்கொண்டாலும், நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வது எமது கொள்கை கிடையாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4