பிரித்தானியாவில் விலைவாசி உயர்வு காரணமாக, கடைகளில் திருடும் சம்பவம் பாரிய அளவில் அதிகரிப்பு

Nila
2 years ago
பிரித்தானியாவில் விலைவாசி உயர்வு காரணமாக, கடைகளில் திருடும் சம்பவம் பாரிய அளவில் அதிகரிப்பு

பிரித்தானியாவில் விலைவாசி உயர்வு காரணமாக, கடைகளில் திருடும் சம்பவம் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, பிரித்தானியாவில் கடந்த 12 மாதங்களில் 18 சதவீதம் உயர்ந்துள்ளமை மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது.  

பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களாகவே 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது.

இதனால் பிரித்தானிய மக்களின் முக்கிய உணவு வகைகளான பாண், பாஸ்தா போன்றவற்றின் விலை ஏற்றம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனால், மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைக்கூட சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இனிவரும் நாள்களில் பணவீக்கம் மேலும் மோசமைடையும் என்பதால், திருட்டுச் சம்பவங்களும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

எனவே, திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க கடைக்காரர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

வழக்கமாக மதுபானம் போன்ற விலையுயர்ந்த பொருட்களில் திருட்டு - தடுப்பு சாதனங்களை கடைக்காரர்கள் இணைத்து வந்தனர்.

எனினும் தற்போது, பட்டர், சீஸ் , சலவை சவர்க்காரம், ரோட்டீன் துண்டுகள் போன்ற சாதாரண பொருள்கள் மீதும் அச்சாதனங்களைப் பொறுத்துகின்றனர். 

இவற்றில் சிலவற்றின் விலை வெறும் 2 பவுண்டுகளேயாகும் என்ற போதிலும் அதனை பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்தியாவசிய பொருட்களின் பணவீக்கம் இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த மாதம் 14.7 சதவீதமடைந்துள்ளது.

இதனால் வருடாந்திர அத்தியாவசிய செலவு சராசரியாக 682 பவுண்டு அதிகரித்து உள்ளதாகக் கணக்கிடப்படுகிறது. இதனால் பலரும் உணவு திருடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!