படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா
இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு 'கில்லர்' என்ற படத்தை அவர் இயக்கி, நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
படப்பிடிப்பு சென்னையை அடுத்த பனையூரில் நடந்து வந்தது. இதில் ஒரு முக்கியமான சண்டை காட்சியைப் படமாக்கி கொண்டிருந்தபோது, கயிற்றால் கட்டப்பட்டு எஸ்.ஜே.சூர்யா சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கயிற்றில் தொங்கிய எஸ்.ஜே.சூர்யா வேகமாக அங்கும் இங்கும் சுழன்று சுழன்று, கீழே இறங்கியதில், அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பி அவரது காலில் மோதி காயம் ஏற்பட்டது.
காலில் ரத்தம் அதிகமாக வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் அருகேயுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 2 கால்களிலும் 2 தையல்கள் போடப்பட்டன. அவரை 2 வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )