சவூதி அரேபியா இன்று புதன்கிழமை நாட்டில் தேசிய விடுமுறை பிரகடனம்
சவூதி அரேபியா இன்று புதன்கிழமை நாட்டில் தேசிய விடுமுறையை பிரகடனப்படுத்தியுள்ளது.
உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் நேற்று லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்;றிக்கொண்டமையை கொண்டாடும் வகையிலேயே இந்த விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சவூதி கால்பந்து அணியின் இந்த குறிப்பிடத்தக்க வெற்றியானது ஆடுகளத்தில் ஒரு முக்கிய வெற்றியாகவும், உலகளாவிய விளையாட்டு அரங்கில் ஒரு பெரிய தருணமாகவும் பார்க்கப்படுகிறது.
போட்டியில் வெற்றி பெற்றமையை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை;, சவூதி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள், பொது சதுக்கங்களைச் சுற்றி, நாட்டின் பச்சைக் கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளியிட்டனர்.
சர்வதேச கால்பந்தின் புதிய சகாப்தம் என்று அவர்கள் கோசமிட்டனர்.
இதனையடுத்தே அனைத்து அரசு ஊழியர்களுக்கும், தனியார் துறையினருக்கும், அனைத்து கல்வி நிலைகளுக்கும் இன்று பொதுவிடுமுறையை சவூதி அரசாங்கம் அறிவித்தது.
'சவூதி அரேபியாவின் சிலந்தி வலையில்' சிக்கிய பின்னர் அர்ஜென்டினாவின் வீரர்கள் 'வரலாற்றுச் சரிவை' சந்தித்ததாக கிளாரின் செய்தித்தாள் கூறியுள்ளது
கால்பந்து எழுத்தாளர் டியாகோ மசியாஸ் இந்த முடிவு, ஒரு நீண்ட கால அடையாளத்தை விட்டுச்செல்லும்' என்று குறிப்பிட்டுள்ளார்.