நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரான காலநிலை நிலவும்
Kanimoli
2 years ago
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் காலி தொடக்கம் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
காற்று வடமேற்கு அல்லது தென்மேற்கு திசையில் மணிக்கு (20-40) கி.மீற்றர்; வேகத்தில் வீசும்.
காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையிலும் கொழும்பில் இருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.