யாழில் பெண் ஒருவரின் கையை இழுத்த காரணத்தால் ஆண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Kanimoli
2 years ago
யாழில் பெண் ஒருவரின் கையை இழுத்த காரணத்தால் ஆண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

யாழில் பெண் ஒருவரின் கையை இழுத்த காரணத்தால் ஆண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதாவது குறித்த நபர் மது போதையில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அப் பெண்கள் இருவரும் புத்தகக்கடையில் வேலை பார்த்தது நேற்று மாலை கடமை முடிந்து வீடு திரும்பும் வேளையிலே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அத்தோடு அவர்கள் அராலி மத்தியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. குறித்த நபரும் அப் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய நபர் என தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் குறித்த பெண்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்துக் குறித்த நபரின் பெற்றோர் மற்றும் உறவினர் வீடுகளுக்குப் பொலிஸார் சென்று அவரைத் தேடியபோது அவர் தலைமறைவாகிவிட்டார் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் அந் நபரை வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் இன்று (23) காலை முற்படுத்துமாறு அவரது உறவினர்களிடம்பொலிஸார் எச்சரித்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!