மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
Prabha Praneetha
2 years ago
இலங்கையில் உள்ள சில பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக , பாடசாலை மாணவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அந்த போதைப்பொருட்களை விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் , பாடசாலைகளைச் சுற்றி புலனாய்வுப் பிரிவினர் வழமையாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, போதைப் பொருள் வர்த்தகர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.