யாழ்ப்பாணம் வல்லைப் பாலத்தினுள் தவறி விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு!

Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணம் வல்லைப் பாலத்தினுள் தவறி விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு!

 அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில், இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் திலக்ஸன் (வயது 19) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞரும் அவரது நண்பர்கள் சிலரும் இணைந்து வல்லை பாலத்தில் நேற்று (22) மாலை  தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர். 

அதன் போது இளைஞன் பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்துள்ள நிலையில், இளைஞரைத் தேடும் பணியில் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டனர். 

இந்த நிலையில் இன்று (23) காலை கடற்படையினரின் சுழியோடிகளால் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!