நாய் ஒன்றினால் பொலிஸாருக்கு ஏற்பட்ட நிலை!

Mayoorikka
3 years ago
நாய் ஒன்றினால் பொலிஸாருக்கு ஏற்பட்ட நிலை!

பாணமுர - எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் பாணமுரவில் பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது நாய் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

திங்கட்கிழமை இரவு சோதனையின் பின்னர் பாணமுர பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று பல மோட்டார் சைக்கிள்களில் பொலிஸ் நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் மோட்டார் சைக்கிள் முன் நாய் ஒன்று ஓடியது. மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பாணமுர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான கான்ஸ்டபிள் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4