சட்டத்தரணி லால் விஜயநாயக்கவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றில் சமர்பிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

Prasu
3 years ago
சட்டத்தரணி லால் விஜயநாயக்கவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றில் சமர்பிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

சட்டத்தரணி லால் விஜயநாயக்கவினால் தயாரிக்கப்பட்ட  புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றில் சமர்பிக்கவேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் கோரிக்கையை இன்று விடுத்துள்ளார்.

குறித்த அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக பல மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

இந்தநிலையில் புதிதாக அரசியலமைப்பை உருவாக்க அவசியமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தமது விமர்சனத்தை தெரிவித்தபோதே, ரஹ்மான் இந்த கருத்தை வெளியிட்டார்.

அதிகாரப் பரவலாக்கத்துக்கு ஆதரவளிப்பீர்களா? என்று ஐக்கிய மக்கள் சக்தியிடம் கேட்பதை விடுத்து பொதுஜன பெரமுனவின் கருத்தை முதலில் ஜனாதிபதி அறிந்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் அவர்களேஇ அதிகாரப்பரவலாக்கலுக்கு எதிரானவர்கள்.

எனவே அவர்களின் கருத்தை அறிந்த பின்னரே ஜனாதிபதி இந்த விடயம் குறித்து பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4