இவ்வருட T20 உலகக்கோப்பையில் பங்குபற்றியவர்களுக்கு நாளொன்றுக்கு 800 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது-ரொஷான் ரணசிங்க

Prasu
3 years ago
இவ்வருட T20 உலகக்கோப்பையில் பங்குபற்றியவர்களுக்கு நாளொன்றுக்கு 800 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது-ரொஷான் ரணசிங்க

அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய  ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 800 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் நேற்று (22) நாடாளுமன்றத்தில் கூடிய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அதே வசதிகள், சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற அதிகாரிகள் அல்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதேவேளை, சாமிக்க கருணாரத்னவை, அணி தெரிவின் போது, கவனிக்காதமை தொடர்பில் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் அறிக்கையை கோருமாறு  அமைச்சர் அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணிக்கு வீரர்களை தெரிவு செய்யும் போது குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த வீரர்களே தெரிவு செய்யப்படுவதாக ஒரு கருத்து நிலவுவதாக இந்த சந்திப்பின் போது தெரியவந்துள்ளது

கடந்த காலங்களில் சிறப்பாகச் செயற்பட்ட சாமிக்க கருணாரத்ன, ஒரு  மதத்துக்குள் உள்ளடங்காத, காரணத்தினால் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4