அண்மைய பாகிஸ்தான் சுற்றுப்பயண போட்டி நிர்ணயம் தொடர்பில் விசாரிக்க கிரிக்கெட் சம்மேளனதிற்கு அழைப்பு

Prasu
3 years ago
அண்மைய பாகிஸ்தான் சுற்றுப்பயண போட்டி நிர்ணயம் தொடர்பில் விசாரிக்க கிரிக்கெட் சம்மேளனதிற்கு அழைப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின், அண்மைய இலங்கை சுற்றுப்பயணத்தின் இடம்பெற்றதாக கூறப்படும், போட்டி நிர்ணயம் தொடர்பில்  விசாரிக்க ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின்) ஊழல் தடுப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த, இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷலை இலங்கைக்கு அழைக்க ஸ்ரீலங்கா  கிரிக்கெட் நிர்வாகக் குழு இன்று (நவம்பர் 23) தீர்மானித்துள்ளது. 

ஐ.சி.சி.யின் முழு உறுப்பினர் என்ற வகையில், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விளையாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில்  சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா  கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 

இந்த குற்றச்சாட்டு, இலங்கை கிரிக்கெட்டின் நற்பெயருக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா  கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4