உணவுப் பற்றாக்குறையான வீடுகளை கண்டறிவதற்காக அரசாங்கத்தினால் செயலி உருவாக்கப்பட்டுள்ளது!

Mayoorikka
3 years ago
உணவுப் பற்றாக்குறையான வீடுகளை கண்டறிவதற்காக அரசாங்கத்தினால் செயலி உருவாக்கப்பட்டுள்ளது!

அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு வீட்டையும் இலக்காகக் கொண்டு ஊட்டச்சத்து மற்றும் உணவு கிடைப்பது குறித்த தரவுகளை சேகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகமும் சுகாதார அமைச்சும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் தலைவர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவு கிடைப்பது குறித்து வீடுகளில் இருந்து தரவைச் சேகரிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தால் ஒரு செயலி (APP) உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இதன்மூலம், உணவுப் பற்றாக்குறை உள்ள குடும்பங்கள் தொடர்பாக சேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்து, எதிர்காலத்தில் அந்த வீடுகளுக்குத் தேவையான உணவை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்த தரவுகள் பிரதேச செயலக அலுவலகங்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளால் தரவுகள் கண்காணிக்கப்படுகின்றன.

அவர்களின் அவதானிப்புகளின்படி பிரதேச செயலகங்கள் ஊடாக அந்தந்த வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யப்படும். உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு இந்த தீர்மானத்தை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4