முகக்கவசம் அணிவது அவசியமானது - விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்
இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள நிலையில் முகக்கவசம் அணிவது அவசியமானது என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.
எனினும் கொரோனாவுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது
அதேசமயம் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இந்நோய், ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது.
எனவே சரியான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது மற்றும் முகக்கவசம் அணிவது அவசியமானது என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் வலியுறுத்தியுள்ளார்.