மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்: நிவாரணம் வழங்குவதில் அரசின் கவனம்

Mayoorikka
1 year ago
மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்:  நிவாரணம் வழங்குவதில் அரசின் கவனம்

வரி அதிகரிப்பு காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவம், பொறியியல் மற்றும் தகவல் தொழிநுட்பத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

 செலவுத்திட்ட விவாதத்தின் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.  பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 30 வீத வரி விதிப்பது நியாயமானதல்ல.

இதேவேளை, எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு நிபுணத்துவம் பெற்றவர்களை பணியமர்த்தும் முறை மாற்றப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் தயாசிறி ஜயசேகர, வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பில் கருத்து தெரிவித்ததோடு, அமைச்சர் சுசில் பிரேமஜயனும் தலையிட்டார்.
 
விவாதத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச, போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகக் குற்றம் சுமத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!