மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் அன்வர் இப்ராகிம்

Keerthi
3 years ago
 மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் அன்வர் இப்ராகிம்

மலேசியாவில் ஐக்கிய மலாய் தேசிய கட்சி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதலில் பிரதமராக மகாதீர் முகமட் பதவி ஏற்றார். ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இராஜினாமா செய்தார். 

இதையடுத்து மொகிதீன் யாசின் பிரதமராக பதவி ஏற்றார். அவர் மீது ஊழல் புகார் எழுந்ததால் கடந்த ஓகஸ்ட் மாதம் பதவி விலகினார். அதன்பிறகு புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாசோப் பதவி ஏற்றார்.

இதற்கிடையே ஆளும் கூட்டணியின் பெரிய கட்சியான அம்னோ கட்சி அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் உத்தரவிட்டார். இதற்கு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா ஒப்புதல் அளித்தார். அடுத்த 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 

இதன் முடிவுகள் வெளியான நிலையில், அன்வர் இப்ராஹீம் பெரும்பான்மைக்குத் தேவையான 112 இடங்களுக்குக் குறைவாக 82 இடங்களைப் பெற்றது. முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 73 இடங்களை வென்றது, அதன் கூட்டணிக் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களைப் பெற்று மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 

ஆனால், மற்ற சிறிய கட்சிகள் ஐக்கிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டதை அடுத்து அன்வார் வெற்றி பெற்றார். மலேசிய எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான அறிவிப்பை மன்னர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு அவர் பிரதமராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிமை மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அறிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4