குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதித் தடை நீக்கம்
Prathees
2 years ago
பல பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நவம்பர் 23ஆம் தேதி முதல் தளர்த்தும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இறக்குமதி தடை நீக்கப்பட்ட பொருட்களில் குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் பிரேக் பேட்கள் ஆகியவை அடங்கும்.
இந்த வர்த்தமானியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக கையொப்பமிட்டுள்ளார்.
வர்த்தமானியின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட HS குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பொருட்களின் இறக்குமதி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் முன் அனுமதிக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும்.