ஸ்போர்ட் செயின் கணினி மென்பொருள் மூலம் 1500 கோடி ரூபாய் மோசடி: சீனப்பிரஜைகள் உட்பட 8 பேர் கைது

Prathees
1 year ago
ஸ்போர்ட் செயின் கணினி மென்பொருள் மூலம் 1500 கோடி ரூபாய் மோசடி: சீனப்பிரஜைகள் உட்பட 8 பேர் கைது

ஸ்போர்ட் செயின் (தங்க நாணயம்) என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி, குறித்த மென்பொருள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பலன்கள் வழங்கப்படும் என ஏமாற்றி பணம் டெபாசிட் செய்ய ஒதுக்கப்பட்ட வழக்கில் சீன பெண் மற்றும் சீன பிரஜை உட்பட எட்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நேற்று (24) உத்தரவிட்டார்.

அந்த வழக்கின் முதலாவது சந்தேக நபரான ஷியாமல் கீர்த்தி பண்டார சில வருடங்களுக்கு முன்னர் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் தற்போது பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை வைத்துள்ளார்.

சந்தேகநபர்களில் எஞ்சியவர்கள் மிக மதிப்புமிக்க வீடுகள் மற்றும் இதர சொத்துக்களை சூப்பர் ஹவுசிங் காம்ப்ளக்ஸ்களில் இருந்து வாங்கியுள்ளனர் என அரச தரப்பு சட்டத்தரணி ஹன்ச அபேரத்ன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதுவரை வெளியாகியுள்ள தகவலின்படிஇ நாடு முழுவதும் குறித்த வலையமைப்பை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயற்படுத்திய சந்தேகநபர்கள் ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக அரசாங்க தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றில் தெரிவித்தார்.

அந்த சந்தேக நபர்களின் வலையில் வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் உட்பட ஏராளமானோர் சிக்கி பல நூறு கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகவும்இ ஆனால் அவமானம் காரணமாக இது குறித்து புகார் கூறாமல் தவிர்த்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், தற்போது பிணையில் வெளிவரும் வழக்கின் முதலாவது சந்தேகநபர் மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு எவ்வித ஆதரவையும் வழங்கவில்லை எனவும், ஏனைய குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டாம் என அவர் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றில் மேலும் தெரிவித்தார். 

உண்மைகளை பரிசீலித்த பிரதான நீதவான், பிணையில் விடுவிக்கப்பட்ட முதலாம் சந்தேகநபரான ஷியாமல் கீர்த்தி பண்டாரவின் பிணை உத்தரவை இரத்து செய்து, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அந்த சந்தேகநபர்கள் சார்பில் அவர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கைகள் தொடர்பிலான உத்தரவை எதிர்வரும் 8ஆம் திகதி பிறப்பிக்கவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!