நாட்டில் நேற்றைய தினம் வெவ்வேறு இடங்களில் இடம் பெற்ற விபத்துக்களில் மூவர் பலி

நாட்டில் நேற்றைய தினம் வெவ்வேறு இடங்களில் இடம் பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை காவல் துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கைல் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அங்கும்புர காவல் துறை பிரிவிற்குட்பட்ட மாத்தளை ஒவிலிகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 60 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதேவேளை கம்பளை ஹெம்மாத்தகம பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 78 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பெண்கள் இருவரும் சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மொனராகலை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.



