சர்வதேச தரத்துக்கமைய தேசிய அடையாள அட்டை..
Prabha Praneetha
2 years ago

இலங்கை பிரஜை அடையாளம் காணும் , சர்வதேச தரத்துக்கமைய தேசிய அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளது.
இலங்கைப் பிரஜை ஒருவரை நம்பத்தகுந்த வகையில் அடையாளம் காண்பதற்காக 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குடிமக்களின் சுய விபரங்கள், அவர்களின் உயிரியல் பண்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளது.
அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய பின்னர், தேசிய தனிநபர் பதிவேட்டை மத்திய தரவு அமைப்பாக நிறுவுவதற்கும் இதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழில்நுட்ப அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.



