இளைஞர்கள் அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கவேண்டும் - அதுரலியே ரத்தின

Kanimoli
3 years ago
இளைஞர்கள் அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கவேண்டும் - அதுரலியே ரத்தின

இளைஞர்கள் அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தின தெரிவித்துள்ளார்.

இன்று எமது தேசத்தின் ஒழுக்கம் சீர்குலைந்துவிட்டது. இன்றைய இளைஞர்களிடம் ஆளுமை இல்லை. ஒரு தேசமாக நாம் வலுவிழந்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

18 அல்லது 20 வயதிலோ அல்லது அதற்கு இடைப்பட்ட காலத்திலோ ஆயுதப்படை பயிற்சி முழு நாட்டிற்கும் வழங்கப்பட வேண்டும்.

இன்று எமது நாடு உறுதியற்ற பலவீனமான நாடாக மாறியுள்ளது.  ஒரு கட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களை அதற்கு பரிந்துரை செய்தோம்.

ஒரு வருடம் அல்லது 6 மாதங்களுக்கு இந்த நாட்டின் ஒட்டுமொத்த தேசத்தையும் ஆயுதப்படை பயிற்சியில் ஈடுபடுத்துங்கள். இது நாட்டின் மீதான வற்புறுத்தல் அல்ல என அவர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4