சீனாவின் நன்கொடையான 10.6 மில்லியன் லீற்றர் டீசலுடன் நாளை வருகிறது சூப்பர் ஈஸ்டன் கப்பல்!

Mayoorikka
3 years ago
சீனாவின் நன்கொடையான 10.6 மில்லியன் லீற்றர் டீசலுடன் நாளை வருகிறது  சூப்பர் ஈஸ்டன் கப்பல்!

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10.6 மில்லியன் லீற்றர் டீசலுடன் ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நாளை (26) வந்தடையும். சீனாவில் இருந்து புறப்பட்ட ‘சூப்பர் ஈஸ்டன்’  கப்பல் தற்போது சிங்கப்பூர் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும். 

இலங்கையின் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எரிபொருள் நெருக்கடியால் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் இந்த எரிபொருள்  விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4