க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாண மாணவர்கள் சாதனை!

Mayoorikka
3 years ago
 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாண மாணவர்கள் சாதனை!

2021ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் இருந்து 16 ஆயிரத்து 564 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையிலேயே 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் 'ஏ' தரத்தில் சித்தியை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் யாழில் 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் 'ஏ' தர சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதில் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 3,009 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் 193 மாணவர்கள் 9 பாடங்களிலும் 'ஏ' தரத்தில் சித்தியடைந்துள்ளனர்.

இதில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 64 பேரும், யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் 62 பேரும் 9 பாடங்களிலும் 'ஏ' தரச் சித்தியை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4