யானைகளை கொன்ற சந்தேக நபரை கைது செய்த நடவடிக்கை

Prathees
3 years ago
யானைகளை கொன்ற சந்தேக நபரை கைது செய்த நடவடிக்கை

வெள்ளவாய குமாரதாச மாவத்தை பகுதியில் காட்டு யானைகளை கொன்று 4 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கஜமுத்துக்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் லஹுகல முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு சந்தேகநபரிடம் இருந்து 04 கஜமுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரி, அட்டகலம்பன்ன பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவராவார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் வெல்லவாய வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4