பொலிஸ் ஆணைக்குழுவிற்கு ஒன்பது மாதங்களுக்கு ஒரு முறை ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்

Kanimoli
3 years ago
பொலிஸ் ஆணைக்குழுவிற்கு ஒன்பது மாதங்களுக்கு ஒரு முறை ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்

பொலிஸ் ஆணைக்குழுவிற்கு ஒன்பது மாதங்களுக்கு ஒரு முறை ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவிற்கு 1100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்காமை, பக்கச்சார்பான தீர்வுகள், அதிகார துஷ்பிரயோகம், தாக்குதல்கள், சித்திரவதைகள், பெண்களை துன்புறுத்துதல், போதைப்பொருள் தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுகள் போன்ற சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் புதிதாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதுள்ள ஆணைக்குழு இந்த முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4