இந்தோனேசிய நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக அதிகரிப்பு

#Indonesia #Earthquake #Death
Prasu
3 years ago
இந்தோனேசிய நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பல கட்டிங்கள் இடிந்து விழுந்தன. 

இதில் 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 700-க்கும் கூடுதலானோர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். 

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடந்தது. கடந்த புதன்கிழமை காலை இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 

இதனால், பலி எண்ணிக்கை 252 ஆக உயர்ந்தது. இதன்பின், நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்தது. 

இறந்தவர்களில் பலர் குழந்தைகள். நிலநடுக்க பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் மாயமான 20 பேரை தேடி வருவதாக தேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்க பகுதிகளை கடந்த சில தினங்களுக்கு முன் அதிபர் ஜோகோ விடோடோ நேரில் சென்று பார்வையிட்டார். 

வீடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4