இத்தாலியின் இஷியா தீவில் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இடிபாடுகளில் சிக்கு புதையுண்ட 100 பேர்

Prasu
1 year ago
இத்தாலியின் இஷியா தீவில் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இடிபாடுகளில் சிக்கு புதையுண்ட 100 பேர்

இத்தாலியின் இஷியா தீவில் பேய் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளில் மொத்தமாக 100 பேர் சிக்கிக்கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இடிபாடுகளில் சிக்கி 8 பேர் பலியானதாக வெளியான தகவலை அடுத்து, மேலும் 13 பேர் நிலச்சரிவில் சிக்கி புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரு மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், வெள்ளத்துடன் சகதியும் கலந்துள்ளதால் அப்பகுதியில் குடியிருப்புகளும் மூழ்கியுள்ளன.

உள்ளூர் நேரப்படி விடிகாலை 4 மணிக்கு பெருமழையுடன் நிலச்சரிவும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது. மாயமானவர்கள் தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, நிலச்சரிவில் சிக்கியவர்களில் பச்சிளம் குழந்தை ஒன்றும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காலநிலை மிகவும் கடுமையாக இருப்பதால் உரிய நேரத்தில் உதவியை அளிக்க முடியாத நிலை இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே, மீட்பு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், இஷியாவில் வசிப்பவர்கள் குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டாம் என உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் ஜார்ஜியா மெலோனி நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதாகவும் அவரது அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!