உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரில் டென்மார்க்கை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்

Prasu
3 years ago
உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரில் டென்மார்க்கை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 61 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். 

இதற்கு பதிலடியாக 68 வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் கோல் அடித்தார். இதனால் போட்டி சமநிலையை எட்டியது. 

எனினும் 86 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. 

இதன் மூலம் டி பிரிவில் 6 புள்ளிகளுடன் பட்டியலில் அந்த அணி முதலிடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4