பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான தேரர் வழக்கில் புதிய திருப்பம்

#SriLanka #Sexual Abuse #LANKA4 #Case #Allegation #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான தேரர் வழக்கில் புதிய திருப்பம்

அனுராதபுர அட்டமஸ்தானத்தின் முன்னாள் தலைமைத் தேரர் பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், குற்றப் புலனாய்வில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு அரச பகுப்பாய்வாளரிடம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நீண்ட தலைமுடிப் பகுதி, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியுடையது அல்ல என அரச பகுப்பாய்வாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின்படி, சிறுமி சுட்டிக்காட்டிய மிதியடியில் தேரரின் விந்து மாதிரிகள் காணப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தலைமுடி வேறு ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணை 2027ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான முழுமையான உண்மைகளை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4