குற்றக் கும்பலைச் சேர்ந்த நபரொருவர் கைக்குண்டுடன் கைது

Prathees
3 years ago
குற்றக் கும்பலைச் சேர்ந்த நபரொருவர் கைக்குண்டுடன் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் பிரதான சீடன், கம்பஹா, அமுனுகொட, இம்புல்பே பகுதியில் கைக்குண்டு மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெபட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி மினுவாங்கொடை, மகேவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைக்கு உதவிய குற்றச்சாட்டிலும் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்படவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4