ஆறாத வடுவில் 15 ஆண்டுகள்: ஐயன்கன்குளம் கிளைமோர் தாக்குதல்: உயிரிழந்த மாணவர்களின் நினைவிடத்தில் நினைவேந்தல்

Mayoorikka
3 years ago
ஆறாத வடுவில் 15 ஆண்டுகள்: ஐயன்கன்குளம்  கிளைமோர் தாக்குதல்: உயிரிழந்த மாணவர்களின் நினைவிடத்தில் நினைவேந்தல்

முல்லைத்தீவு - ஐயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி  இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரினால் நோயாளர் காவு வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 15 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

இத் தாக்குதலில் ஆறு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இருவர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உயிரிழந்த மாணவ செல்வங்களின் நினைவிடத்தில் இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் புகைப்படங்களை வைத்து அதற்கான மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான அஞ்சலியை செலுத்தினர்.

இந்த தாக்குதலால், நோயாளர் காவுவண்டியில் பாடசாலை சீருடையுடன் பயணித்த மாணவிகளான -  "நாகரத்தினம் பிரதீபா (வயது-16), நாகரத்தினம் மதிகரன் (வயது-15), நித்தியானந்தன் நிதர்சனா (வயது-13), கருணாகரன் கௌசிகா (வயது-15), சந்திரசேகரம் டிறோஜா (வயது-16), அற்புதராசா அஜித்நாத் (வயது-17)ஆகிய ஆறு மாணவர்கள் மற்றும் சுகாதாரத் தொண்டர்களான சண்முகவடிவேல் சகுந்தலாதேவி (வயது-19), மாரிமுத்து கிருஸ்ணவேணி (வயது-21)" ஆகியோருமாக எட்டுப்பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதற்கான நினைவு நிகழ்வில் பொது சுடரினை சம்பவத்தில் பலியான மாணவிகளில் ஒருவரான சந்திரசேகரம் டிறோசா அவர்களின் தந்தை சந்திரசேகரம் அவர்கள் ஏற்றி வைக்க சம நேரத்தில் ஏனைய உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செய்தனர்.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4