வெலிகம பிரதேசத்தில் முகநூல் விருந்து : 10 பேர் கைது

Prathees
3 years ago
வெலிகம பிரதேசத்தில் முகநூல் விருந்து : 10 பேர் கைது

வெலிகம பலேன பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 9 இளைஞர்கள் உட்பட 10 பேரை  கைது செய்துள்ளதாக மாத்தறை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு சட்டவிரோத போதைப்பொருள், கஞ்சா மற்றும் இனந்தெரியாத போதைப்பொருளுடன் 08 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் 21, 24, 27, 35, 22, 17 வயதுடைய பெலியத்த, சியாவலல, உடுகாவ – தெலிஜ்ஜவில, கனங்கே கடவிடியா, மிரிஸ்ஸ, பெலான மற்றும் ரணால ஆகிய இடங்களில் வசிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்துக்கு நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவான மக்கள் வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4