பிரித்தானியாவில் பெரிய அளவிலான உருமாற்றத்தை மேற்கொள்ள தயாராகும் பிரதமர்!
பிரித்தானியா அதன் இலக்குகளை எட்டும் அணுகுமுறையில் பெரிய அளவிலான உருமாற்றத்தைக் கண்டு முன்னேறும் என்று பிரதமர் ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார்.
சீனா, ரஷ்யா போன்ற பிரித்தானியாவின் போட்டிநாடுகள் நீண்ட காலத்துக்கான திட்டங்களைத் தீட்டுவதைக் குறிப்பிட்ட சுனாக், குறுகிய காலத்துக்கு மட்டுமே திட்டமிட்டுச் சிறந்ததே நடக்கும் என்ற எண்ணம் வைத்திருப்பது போதாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர உரிமை, வெளிப்படைத்தன்மை ஆகிய அம்சங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றுகின்றன. அத்தகைய அம்சங்களை ஒன்றுமே செய்யாமல் அடைய முடியாது.
நாட்டின் முக்கியக் கொள்கைகளான அவற்றை உலக அளவில் தற்காத்துக்கொள்ளவேண்டும்.
பிரித்தானியாவின் செல்வாக்கின் அடித்தளமே அதன் பொருளியல். வெளிநாட்டில் பிரித்தானியாவின் செல்வாக்கு அதன் பொருளியலின் மூலம் பெறப்பட்டது.
ஆகவே, நாடு அதன் பொருளியலை வலுப்படுத்தவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.