அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!
Mayoorikka
2 years ago
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதற்கமைய இவர் நாளை அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.
மேலும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளையும் சந்திகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.