பால்மா வெளியேற்றம்: குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை

Mayoorikka
2 years ago
பால்மா வெளியேற்றம்: குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை

 அதிகளவான  தொகை பால் மாவை, துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற, சுங்கத் திணைக்களம் தடையாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பால் உணவு இறக்குமதியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும், லக்ஷ்மன் வீரசூரியவினால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதிலளித்த சுங்கத் துறையினர், விசாரணையின் காரணமாக பால் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.

முன்னதாக, சுங்கம் மற்றும் துறைமுகம் ஆகியவை சட்டவிரோதமாக பால் மா கையிருப்புகளை தடுத்து வைத்திருப்பதாகவும், இதனால் நாட்டில் பால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் வீரசூரிய குற்றம் சுமத்தியிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!