லண்டனில் இரண்டு சிறுவர்கள் கொடூரமாக குத்திக் கொலை

Nila
3 years ago
லண்டனில் இரண்டு  சிறுவர்கள்  கொடூரமாக குத்திக் கொலை

தென்கிழக்கு லண்டனில் இரண்டு 16 வயது சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் சனிக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி சுமார் 17:10 மணிக்கு Sewell சாலை, அபே வூட் மற்றும் தேம்ஸ்மீடில் உள்ள Titmuss அவென்யூ ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் உள்ளிட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். வைத்தியர்கள் வரவழைக்கப்பட்ட போதிலும் சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு இடங்களிலும் குற்றக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தகவல் தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சிறுவர்களின் உறவினர்களுக்கு சிறப்பு அதிகாரிகளின் ஆதரவு வழங்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4