வெளிநாடு சென்றவர்களிடம் இருந்து வேலை வாங்கும் திட்டம்
Mayoorikka
2 years ago
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டு பிரஜைகளின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையில் விசேட அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தாரக குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் சுமார் 50 இலட்சம் இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்களை பயன்படுத்திக் கொள்வார்களா என்பதை இலங்கை சிந்திக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.