ஏ.டி.எம் இயந்திரங்களில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த சந்தேகநபர் கைது

Prathees
2 years ago
ஏ.டி.எம் இயந்திரங்களில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த சந்தேகநபர் கைது

ஏ.டி.எம் இயந்திரங்களில் இருந்து 4 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் தொம்பே, கபுகொட பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் இது தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் வீட்டில் 10 ATM அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!