ருஹுணு தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெற்ற மோதல்: 6 பேர் விளக்கமறியலில்
ருஹுணு தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய மாணவர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த 12 மாணவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று தற்போது பயிற்சி பெற்று வரும் இறுதி வருட ஆசிரிய மாணவர்கள் குழுவொன்று விஞ்ஞான பீடத்தில் தங்கியிருந்த இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம்(26) குறித்த சிரேஷ்ட மாணவர்கள் குழு விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்ததாகவும், அதன் பின்னர் அவர்களில் 50 பேர் கொண்ட குழுவொன்று விஞ்ஞான பீட வளாகத்திற்கு வந்து அங்கிருந்த 2ஆம் வருட மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் இரண்டாம் வருட மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.