தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர்பஸ்-321 நியோ ரக விமானம்
Keerthi
2 years ago
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் இந்தியாவின் மதுரை நோக்கி புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம். 41 பயணிகள் மற்றும் 08 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ்-321 நியோ ரக விமானமாகும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமானம் பழுது பார்க்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.