பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ள பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள்
Keerthi
2 years ago
உலகில் பல நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற கொள்கைக்கு மாறிவருகின்றன. அந்த வகையில் பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ளன.
இதனால் பணியை தவிர்த்து மற்ற நாட்களில் பணி நேரம் நீட்டிக்கப்படாது எனவும் சம்பளம் குறைப்பு நடவடிக்கையும் கிடையாது எனவும் அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பணி நேர குறைப்பால் இந்த 100 நிறுவனங்களில் பணியாற்றும் 2 ஆயிரத்து 600 பணியாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
4 நாட்கள் வேலை என்ற மாற்றத்தில் இணைந்திருக்கும் அவின் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதம் ரோஸ் பேசுகையில், நிறுவனத்தின் வரலாற்றில் தான் பார்த்த மிகவும் மாற்றத்தக்க முயற்சிகளில் ஒன்றாகும் என நெகிழ்ந்து பேசியுள்ளார்.