இருண்ட ஜூலை பற்றி மின் பொறியாளர்களின் எச்சரிக்கை
Prathees
2 years ago
அடுத்த வருடம் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் போதிய நிலக்கரி கிடைக்காவிட்டால், அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள் வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன, அடுத்த வருடம் இருண்ட ஜூலை மாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.