கோலாலம்பூருக்குச் சென்ற பேருந்து லொறி மீது மோதியதில் 16 சிங்கப்பூர் பயணிகள் காயமடைந்தனர்

Mayoorikka
1 year ago
கோலாலம்பூருக்குச் சென்ற பேருந்து லொறி மீது மோதியதில் 16 சிங்கப்பூர் பயணிகள் காயமடைந்தனர்

ஜாசினில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் பேருந்து லொறியின்  பின்புறத்தில் மோதியதில் கோலாலம்பூருக்குச் செல்லும் விரைவுப் பேருந்தில் பயணித்த  16 சிங்கப்பூர் பயணிகள் காயமடைந்தனர்.

திங்கள்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்து 27 பயணிகளை ஏற்றிச் சென்றபோது, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை ஏற்றிச் சென்ற லொரி  மீது மோதியதாக ஜாசின் பெஸ்டாரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரி அஸ்மான் தவானன் தெரிவித்தார்.
 
காயமடைந்த பயணிகள் அனைவரும்சிங்கப்பூர்வாசிகள்  என்று ஜாசின் மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி மிஸ்பானி ஹம்தான் கூறினார்.

விரைவுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து  லொறியில்  மோதி விபத்துக்குள்ளானதாக அவர் மேலும் கூறினார்.

சமூகவலைத்தளங்களில்  பரவும் படங்கள், விபத்துக்குள்ளான பேருந்து ஸ்டார்மார்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!