பிரதான மூன்று வீதிகளை புனரமைத்து தருமாறு கோரி வலிகாமம் மேற்கு பிரதேச வாழ் பொதுமக்கள் இணைந்து போராட்டம்

Kanimoli
3 years ago
பிரதான மூன்று வீதிகளை புனரமைத்து தருமாறு கோரி வலிகாமம் மேற்கு பிரதேச வாழ் பொதுமக்கள் இணைந்து போராட்டம்

யாழ், வலிகாமம் மேற்கில் காணப்படுகின்ற பிரதான மூன்று வீதிகளை புனரமைத்து தருமாறு கோரி வலிகாமம் மேற்கு பிரதேச வாழ் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டமானது இன்று(29) காலை மூளாய் பிரதான வீதியை முடக்கி பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநரிடம் தமது பிரச்சினைகளை கொண்டு செல்லவே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “வலி மேற்கு மக்களுக்கு வசந்தம் இல்லையா? ஏசி அறையில் இருந்து வெளியே வாருங்கள் எங்கள் அவலங்களை பாருங்கள், வடமாகாண ஆளுநரே மேற்கில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள், வலி மேற்கில் வசிப்பவர்கள் மக்களா மாக்களா, நகரத்திலும் கிராமத்திலும் வீதிகளில் வேற்றுமையா, 782,784,786 வீதிகளால் பயணிக்கும் மக்கள் வலிகளுடன் செல்வதா, RDA அதிகாரிகளே உங்கள் அசந்தமே எங்கள் அவலங்கள் இனியாவது திரும்பிப் பாருங்கள், யாழ்- மானிப்பாய் காரைநகர் ,மாவடி- மூளாய் -வட்டுக்கோட்டை பொன்னாலை வீதிகளை உடன் புனரமையுங்கள், ”இவ்வாரான பதாகைகளை ஏந்தியவாறு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் சங்கானைப் பிரதேச செயலகத்திற்கு விரைந்ததோடு , பிரதேச செயலரை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சபையின் உபதவிசாளர் சச்சிதானந்தன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான பொன்ராசா, இலங்கேஸ்வரன், சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4