விதிமுறைகளை மீறியதால் 153,375 கிலோகிராம் பால் மாவை தடுத்து வைத்துள்ள இலங்கை சுங்க அதிகாரிகள்

Prasu
3 years ago
விதிமுறைகளை மீறியதால் 153,375 கிலோகிராம் பால் மாவை தடுத்து வைத்துள்ள இலங்கை சுங்க அதிகாரிகள்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதன் காரணமாக, 153,375 கிலோகிராம் பால் மாவைக்  கொண்ட ஆறு கொள்கலன்கள் இலங்கை சுங்கம் தடுத்து வைத்துள்ளதாக  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய, இந்த  கொள்கலன்களை, சந்தைக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாது என குறிப்பிட்டார்.

பால் மாவுக்கு  இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை எனவே பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நியூசிலாந்தில் இருந்து மலேசியா ஊடாக இலங்கைக்கு முழு ஆடை  பால் மா  இறக்குமதி செய்யப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு நாயகத்தின் அனுமதி தேவைப்படாத காரணத்தினால், திறந்த கணக்கு முறையின் கீழ் இந்த பால் மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சொக்லேட் மற்றும் ஆயத்த பால் தேநீர் உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாக இறக்குமதியாளர்,

இந்த மாவை  நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆறு கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4