பிரான்ஸிலிருந்து லண்டன் திரும்பியவருக்கு அதிர்ச்சி! 550 பவுண்ட் அபராதம் விதித்த அதிகாரிகள்

Nila
1 year ago
பிரான்ஸிலிருந்து லண்டன் திரும்பியவருக்கு அதிர்ச்சி! 550 பவுண்ட் அபராதம் விதித்த அதிகாரிகள்

பிரான்ஸின் தெற்கில் வசிக்கும் நபர் ஒருவருக்கு கிழக்கு லண்டன் நகர சபை மொத்தம் 550 பவுண்ட் அபராதம் விதித்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பென் கார்மேக் என்ற பிரித்தானியருக்கே இந்த அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் நாட்டில் இல்லாத போதிலும் இந்த அபராதம் விதிக்கப்பட்டமையால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது காதலியுடன் வாழ்வதற்காக பிரான்ஸின் Bordeaux பகுதிக்கு சென்ற பென் கார்மேக், 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தெருவில் இரண்டு தனித்தனி சந்தர்ப்பங்களில் குப்பைகளை வீசியதற்கான குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

கிழக்கு லண்டனில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருந்த அவர் இன்னும் சில பொருட்களை எடுத்துக்கொண்டு பிரான்ஸிற்கு திரும்பச் செல்லும்போது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே இல்லாத ஒருவர் மீது இவ்வளவு பெரிய அபராதத்தை எவ்வாறு விதிக்கப்படும் என பென் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது போலியான குற்றச்சாட்டாகும். அல்லது தன் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்றே செய்த செயல் என அவர் கூறியுள்ளார்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தான் அந்த காலப்பகுதியில் நாட்டில் இல்லை என்பதனை உறுதி செய்வதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார். எனினும் அவர் அபராத தொகை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்த தவறினால், குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள பென் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், அபராதம் செலுத்த மாட்டேன் என கூறும் பென் தனக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு எதிராக போராடுவதாகும். அதற்கு உதவ தன்னிடம் பலர் இருப்பதாகவும் பென் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பென்னுக்கு எதிராக நடவடிக்கை நகர சபை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!