ஐஸ் மற்றும் கஞ்சாவுடன் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் கைது 

Prathees
3 years ago
ஐஸ் மற்றும் கஞ்சாவுடன் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் கைது 

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் மோசடியை மேற்கொள்வதாக நுகேகொட பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய கட்டளைத் தளபதிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுகாதார திணைக்கள உதவியாளராக கடமையாற்றுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 5 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பணிக்கு வந்து கொண்டிருந்த போது, ​​அவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது சிறிய பொதிகளில் பொதி செய்யப்பட்ட ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருட்களை கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது, ​​போதைப்பொருளுக்கு அடிமையான வைத்தியசாலையில் பணியாற்றும் பல ஊழியர்களுக்கும், வெளியாட்களுக்கும் போதைப்பொருள் விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4